என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்
நீங்கள் தேடியது "வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்"
ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #SterliteCase #SterliteIssue #SupremeCourt
புதுடெல்லி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி ஆய்வு செய்தது.
ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதால் தூத்துக்குடி பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி இருந்தது.
இதற்கிடையே வேதாந்தா நிறுவனமும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவை ஏற்கக் கூடாது என்று அந்த நிறுவனம் சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டது.
கடந்த சில மாதங்களாக இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளும் இந்த மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.
கடந்த 7-ந்தேதி இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் அனைத்தும் முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார், நெல்லை மாநகர இணை கமிஷனர் சுகுணாசிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி, ராம்பா (தூத்துக்குடி), அருண்சக்திகுமார் (நெல்லை) ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
நெல்லை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் 1,600 போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் தூத்துக்குடியின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். #SterliteCase #SterliteIssue #SupremeCourt

நீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன்சின்கா ஆகிய இருவரும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பை வெளியிட்டனர். அவர்கள் தீர்ப்பு விவரம் வருமாறு:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார், நெல்லை மாநகர இணை கமிஷனர் சுகுணாசிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி, ராம்பா (தூத்துக்குடி), அருண்சக்திகுமார் (நெல்லை) ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
நெல்லை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் 1,600 போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் தூத்துக்குடியின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். #SterliteCase #SterliteIssue #SupremeCourt
×

X